மி
யூஸிக் அகாடமியின் ஒத்துழைப்போடு நிறுவப்பட்டது ‘இந்திரா சிவசைலம்’ அறக்கொடை நிதியம். கர்னாடக இசையில் புகழ்பெற்ற வாய்ப்பாட்டு கலைஞர்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கி வந்த இந்த அறக்கட்டளை, முதன் முறையாக வாத்திய இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. கர்னாடக இசையில் சிறந்த கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சேவையை அங்கீகரித்து ஊக்குவிப்பதே இந்த விருதின் முக்கிய நோக்கம்.
சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்பிரமணியம், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா, மல்லாடி சகோதரர்கள், ரஞ்சனி-காயத்ரி ஆகியோரைத் தொடர்ந்து ‘லால்குடி இரட்டையர்கள்’ என இசை உலகில் பரவலாக அறியப்படும் லால்குடி கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி ஆகியோர் இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதை சமீபத்தில் சென்னை, மியூஸிக் அகாடமியில் பெற்றனர். அறக்கட்டளையின் அறங்காவலரான மல்லிகா சீனிவாசன், தனது அன்னை இந்திரா சிவசைலம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கர்னாடக இசையில் சாதனைபுரிந்த கலைஞர்களுக்கு இந்த விருதினை வழங்கி சிறப்பிக்கிறார்.
இதுகுறித்து மல்லிகா சீனிவாசன் பேசும்போது, ‘‘வாத்திய இசைக் கலைஞர்களுக்கு ‘இந்திரா சிவசைலம்’ அறக்கொடை விருது முதன் முறையாக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்கள் லால்குடி இரட்டையர்களான லால்குடி கிருஷ்ணனும் லால்குடி விஜயலட்சுமியும். லால்குடி ஜெயராமன் என்னும் மேதையையே குருவாகவும் தந்தையாகவும் பெரும்பேறு பெற்றவர்கள் இவர்கள். ஐந்தாவது தலை முறையாக கர்னாடக இசைக்கு சேவை செய்யும் மரபில் வந்த இவர் கள் லால்குடி பாணியை இந்திய இசை மேடைகளிலும் உலக இசை மேடை களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றனர். கர்னாடக இசையின் பலமே அதன் மனோதர்மத்தில்தான் உள்ளது. பாரம்பரியத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், அதே நேரத்தில் பல புதுமைகளையும் புகுத்தி கர்னா டக இசையின் எல்லைகளை விரிக்கும் அவர்களின் இசைப் பணி மேலும் இவ்விருதின் மூலம் சிறக்கும்" என்றார் .
இசைக்கே அர்ப்பணம்
விருதினைப் பெற்றுக் கொண்ட லால்குடி இரட்டையர்கள், ‘‘இந்த விருதுக்கு எங்களைத் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவினருக்கு முதல் நன்றி. எங்கள் அன்புக்குரிய குரு மற்றும் எங்களின் தாய்க்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறோம்.
இசையில் உன்னதமான மேன்மை நிலையை சென்றடைவதற்காக எங்களையே மறுஅர்ப்பணம் செய்துகொள்வதற்கான உத்வேகத்தை எங்களுக்கு இந்த விருது அளிக்கும்’’ என்றனர். விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற லால்குடி இரட்டையர்களின் இசை நிகழ்ச்சி ரசிகர்களை மெய் மறக்க வைத்தது!
முக்கிய செய்திகள்
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
2 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
3 years ago
கலை
4 years ago
கலை
4 years ago
கலை
5 years ago
கலை
5 years ago