தி இந்து - சரிகம எம்.எஸ்.எஸ். விருது 2013 இசை நிகழ்ச்சி
அந்த இசை மேதையைக் கெளரவிக்கும் விதத்தில் 'தி இந்து' நாளிதழும் - சரிகம நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் இளம் வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கு 'எம்.எஸ்.எஸ். விருது' (MSS AWARD) வழங்கி வருகின்றன.
இந்தப் போட்டி சர்வதேச அளவில் நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டும் எம்.எஸ். சுப்புலட்சுமி பிறந்தநாள் அன்று 'எம்.எஸ்.எஸ் விருது–2013' போட்டி குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
இப்போட்டி பல கட்டங்களாக நடைபெற்றது. இறுதிப் போட்டி பிரமாண்டான லைவ் நிகழ்ச்சியாக இன்று மாலை ஹாரிங்டன் சாலையில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பாராவ் கச்சேரி அரங்கில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை தாங்கிச் சிறப்பிக்கவுள்ளார். இப்போட்டியில் பங்குபெற அஸ்வந்த் நாராயணன், கார்த்திக் நாராயணன், அங்கிதா ரவீந்திரன், செளமியா ஸ்ரீதர், ராம்நாத் வெங்கட் பகவத் ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்.
இதில் வெற்றிபெறுவருக்கு 'தி இந்து- சரிகம எம்.எஸ்.எஸ். விருது - 2013' வழங்கப்படும். அத்துடன், எம்.எஸ்.எஸ். விருது பெறுபவருக்கு சரிகம நிறுவனத்தில் இசைத் தொகுப்பு வெளியிடும் வாய்ப்பும் உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் நிகழ்ச்சி நடைபெற உள்ள முத்தா வெங்கடசுப்பாராவ் கச்சேரி அரங்கில் இன்று காலை 10 மணி முதல் கிடைக்கும். ww.eventjini.com என்ற இணைய முகவரியிலும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம்.
நிகழ்ச்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 98840 73737 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.