வேலை வேண்டுமா?- நிர்வாக அதிகாரி ஆகலாம்!

மத்திய அரசின் பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனமான ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிப் (Administrative Officer) பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 300 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப் பணி, கணக்கு, சட்டம், பொறியியல், மருத்துவம் எனப் பல்வேறு பணிகள் அடங்கும்.

தேவையான தகுதி

பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். பொதுப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. சட்டப் பணிக்கு பி.எல். பட்டதாரிகள், கணக்குப் பணிக்கு எம்.காம்., எம்.பி.ஏ. (நிதி) பட்டதாரிகள், பொறியியல் பணிக்கு பி.இ. ஆட்டோமொபைல் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவப் பணிக்கு எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயது குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

என்ன கேட்பார்கள்?

தகுதியானோர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். மெயின் தேர்வில் கூடுதலாக, ஆங்கிலத்தில் விரிவாகப் பதிலளிக்கும் வகையிலான தேர்வும் இடம்பெறும்.

நிர்வாக அதிகாரி பணிக்கு ஆரம்ப நிலையில், ரூ. 51 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். தகுதியுள்ள பட்டதாரிகள் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தைப் (www.orientalinsurance.org.in) பயன்படுத்தி செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை நிறுவனத்தின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

தேர்வு நாள்

முதல்நிலைத் தேர்வு : அக்டோபர் 22 (உத்தேசமாக)

மெயின் தேர்வு: நவம்பர் 18

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்