வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து திட்டங்களும் தயராக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வடகொரிய தனது அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை பயமுறுத்தும் வகையில் அவ்வப்போது அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் வடகொரியாவின் செயலுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளை தடுப்பதற்கு பல திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில்,”வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தடுப்பதற்கான எல்லா திட்டங்களையும் நாங்கள் தயராக வைத்திருக்கிறோம். அந்த சூழல் உருவாகும்வரை எங்களுடைய திட்டங்களை வெளியிட மாட்டோம்” என்று கூறியுள்ளது.
மேலும் இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, "வடகொரியாவின் நடவடிக்கைகளை தடுப்பது பற்றி அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகவே பேசினார். நாங்கள் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் நிறுத்துவது குறித்து கவனமாக இருக்கிறோம். இதற்கான அனைத்து திட்டங்களையும் அமெரிக்கா தயராக வைத்துள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago