பி.இ. எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படிப்பவர்கள், பல்வேறு கனவுகளுடன் கல்லூரியில் சேர்கின்றனர். ஆனால், இந்தப் படிப்பை முடித்தவர்களில் 80 சதவீதம் பேர் ஐடி நிறுவனங்களில் பணிக்குச் செல்கின்றனர். ஐடி நிறுவனங்களுக்கு இணையாக பல்வேறு துறைகளிலும் இதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பட்டமேற்படிப்பு, சான்றிதழ் படிப்பு மூலம் தரமான வாழ்வை பெறலாம்.
தேசிய அளவில் நடத்தப்படும் கேட் உள்ளிட்ட தகுதித் தேர்வு மூலம் பொது நிறுவனங்களில் உயர்ந்த பதவியை அடைய முடியும். எம்.இ. / எம்.டெக் பட்டமேற்படிப்பில் VLST டிசைன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் டிசைன் அண்டு டெக்னாலஜி, பவர் எலக்ட்ரானிக்ஸ், ஃபைபர் ஆப்டிக்கல் அண்டு லைட்வேவ் இன்ஜினீயரிங் ஆகியன கூடுதல் வாய்ப்பு கொடுக்கக்கூடிய பட்டமேற்படிப்புகளாகும்.
RS அண்டு மைக்ரோ வேவ் இன்ஜினீயரிங், டெலிகம்யூனிகேஷன் சிஸ்டம் படிப்புகள் நல்ல பணி வாய்ப்பு அளிக்கக் கூடியவை. ஆட்டோமொபைல் துறையில் உயர் பதவிக்கு செல்ல, ஆட்டோமேடிவ் இன் எலக்ட்ரானிக்ஸ் படிக்கலாம். இது வேலூர் விஐடி கல்வி நிறுவனத்தில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அப்லைடு எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகள், புதிய புதிய மருத்துவ பரிசோதனை கருவிகளை கண்டுபிடிக்க வாய்ப்பளிக்கிறது.
எம்.இ. கம்யூனிகேஷன் நெட்வொர்க்கிங், ஏவியானிக்ஸ் உள்ளிட்டவை சிறந்த பட்டமேற்படிப்புகளாக உள்ளன. எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் படிக்கும்போதே, MOS டிரான்சிஸ்டர் ஆபரேஷன், CNOS சர்க்யூட்ஸ், லாஜிக்கேட்ஸ் ஃபிலிப்ஃபிலாப்ஸ், ஆபரேஷனல் ஆம்னிஃபயர், ஃபீட்பேக் ஆம்னிஃபயர் உள்ளிட்ட சிறப்பு பாடங்களில் நல்ல திறனையும் அறிவையும் வளர்த்துக் கொள்வதால், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற அழைப்பு விடுக்கின்றனர்.
பட்டமேற்படிப்பில் விருப்பமில்லாதவர்கள், குறைந்தகால சான்றிதழ் படிப்பு மூலம் நல்ல பணிக்குச் செல்லலாம். DSP (டிஜிட்டல் சிக்னல் பிராஸசிங் சிஸ்டம் டிவைன்), அட்வான்ஸ் டிப்ளமோ ரியல் டைம் ஆப்ரேடிங் சிஸ்டம், சர்டிபிகேட் கோர்ஸ் வெரிலாக் அண்டு VHDL, அட்வான்ஸ் புரோகிராம் இன் வயர்லெஸ் டெக்னாலஜி, அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஆப்டிக்கல் ஃபைபர் கம்யூனிகேஷன், பிஜி டிப்ளமோ இன் மொபைல் கம்ப்யூட்டிங், அட்வான்ஸ் டிப்ளமோ இன் டெலிகாம் புரோட்டாகால் டெவலப்மென்ட், பிஜி டிப்ளமோ இன் இன்டிரஸ்டியல் ஆட்டோமேடிவ் சிஸ்டம் டிசைன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளை முடிப்பவர்களுக்கு, ஐடி துறைக்கு இணையான பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
விமானங்களின் வரவு அதிகமாகியுள்ள நிலையில், வான் வெளி வழித்தடங்களுக்கான கட்டுப்பாடு அறைகளில் பணியாற்ற கூடிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. இதில் விருப்பமுள்ளவர்கள் ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை ஏடிசி மூலம் சிவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வளர்ந்து வரும் கணினி யுகத்தில் நானோ டெக்னாலஜிக்கு மிகப்பெரும் எதிர்காலம் உள்ளது. கோவை, கொச்சியில் உள்ள அமிர்தா பல்கலை.யில் எம்.டெக் நானோ சயின்ஸ் அண்டு டெக்னாலஜி படிப்புகள் உள்ளன. தரமான வாழ்க்கை அளிக்கக் கூடிய பட்டமேற்படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் எளிதில் நல்ல வேலைவாய்ப்பை பெறலாம்.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago