திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது சிலைக்கு வெற்றித் தமிழர் பேரவை என்ற அமைப்பின் நிறுவனத் தலைவரான கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழர்களின் தத்துவ அடையாளமாக திகழ்பவர் திருவள்ளுவர். திருக்குறளைக் கொண்டாடுவது தமிழர்களின் காலக் கடமையாகும். வெற்றியைப் போலவே அதை அடையும் வழிகளும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறது திருக்குறள்.

மதச்சார்பற்ற நூலான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்