தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 66,000 பேரைக் கொண்டு ரத்த தானம் செய்யும் முயற்சியில், அரசு வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜன. 11-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படும். தமிழக வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் கொண்டாடப்படும் சாலை பாதுகாப்பு வார விழாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த மாதம் சாலை பாதுகாப்பு வார விழா முடிவடைந்த நிலையில், தமிழக வட்டாரப் போக்குவரத்து துறை கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் இறங்கியுள்ளது. வரும் பிப். 14ம் தேதி மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், தனியார், பொது நிறுவனங்களைச் சார்ந்தவர்களைக் கொண்டு ஒரே நாளில் 66,000 பேர் ரத்த தானம் செய்யும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவுறுத்தலின்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், ரத்த தானம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு அமைப்புகளும், போக்குவரத்துத் துறை சார்ந்த அலுவலகம், பொதுத் துறை நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் பிப். 14-ம் தேதி ரத்த தானம் செய்திட வேண்டுகோள்விடுத்து, வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago