காரைக்குடியில் சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இருக்கிறது. ரசாயனம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக மத்திய அரசால் 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. ரசாயனத்துறையில் திறமையான பொறியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1988-ம் ஆண்டு முதல் கல்வி நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு பி.டெக். கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினீயரிங் 4 ஆண்டு படிப்பு படிக்கலாம். மின்கலம் (பேட்டரி) தயாரிப்பு மற்றும் உலோகங்களுக்கும் ரசாயனத்துக்கும் உள்ள தொடர்புகள், தன்மைகள் தொடர்பான படிப்பு இது.
பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவு எடுத்தவர்கள் இதில் சேரலாம். உலகிலேயே 6 அல்லது 7 இடங்களில் மட்டுமே மேற்கண்ட பட்டப் படிப்பு இருக்கிறது. அதிலும், ஆசியாவில் இப்படிப்புக்காக இருக்கும் ஒரே கல்வி நிறுவனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 40 இடங்கள் மட்டுமே. அதில் 35 இடங்கள் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. பொறியியல் கலந்தாய்வு மூலமே இங்கு இடம் கிடைக்கும். கட் ஆஃப் மதிப்பெண்கள் 200-க்கு 180-க்கு மேல்.
இதில் எலெக்ட்ரோ கெமிக்கல் ரியாக்ஷன் இன்ஜினீயரிங், எலெக்ட்ரோ கெமிக்கல் பிராசஸ் டெக்னாலஜி, கரோஷன் இன்ஜினீயரிங், எலெக்ட்ரோ கெமிஸ்ட்ரி, ஹீட் அண்ட் மாஸ் டிரான்ஸ்ஃபர் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இறுதியாண்டில் அட்வான்ஸ் பேட்டரி சிஸ்டம், எலெக்ட்ரோ கெமிக்கல் எனர்ஜி கன்வர்ஷன் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் காரைக்குடி நகரில் இப்படியொரு சிறந்த படிப்பு இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. கொஞ்சம் விவரம் தெரிந்து இக்கல்லூரிக்கு செல்பவர்களும் வெளிப்புறத் தோற்றம் உள்ளிட்டவற்றைப் பார்த்து சற்று தயங்குகிறார்கள். அதிக வேலைவாய்ப்புகளையும் நல்ல எதிர்காலத்தையும் தரக்கூடிய எலக்ட்ரோ கெமிக்கல் துறைக்கு பிரமாண்டம், அலங்காரம் தேவையில்லை. ஆய்வுகள் செய்வதற்கு, கற்பிப்பதற்கு, படிப்பதற்கு, தங்குவதற்கு என்னென்ன வசதிகள் தேவையோ அதை அனைத்தையும் மத்திய அரசு செய்திருக்கிறது.
தவிர, இத்துறையை தேர்வு செய்வதில் பெண்கள் சற்று தயக்கம் காட்டுகின்றனர். இக்கல்லூரியின் தேர்ச்சி விகிதங்களை ஆய்வு செய்தபோது, டாப் ரேங்க் பட்டியலில் அதிகம் இடம் பிடித்திருப்பது இங்கு குறைந்த எண்ணிக்கையில் படித்த மாணவிகள்தான். எனவே, பெண்களும் தயங்காமல் படிக்கலாம்.
இதிலும் முதுகலைப் படிப்புகளாக எம்.டெக். (இந்தியாவில்) எம்.எஸ். (அமெரிக்காவில்) படிப்புகளில் கெமிக்கல் பிராசஸிங் டெக்னாலஜி, கரோஷன் இன்ஜினீயரிங், எலெக்ட்ரோ கெமிக்கல் ரியாக்ஷன் இன்ஜினீயரிங் போன்ற இரண்டாண்டு படிப்புகள் உள்ளன. இன்று கைபேசி தொடங்கி விமானம்வரை பேட்டரி இல்லாத பொருட்களே கிடையாது. எனவே, இப்படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் பிரச்சினையே இல்லை. ஆரம்ப சம்பளம் ரூ.30 ஆயிரம் தொடங்கி ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கிறது. உற்சாகமாக படித்தால் வளமான எதிர்காலம் நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை.
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago