ரியல் எஸ்டேட் முதலீட்டில் புதிய முயற்சி

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், நேரடியாகத் தங்கம் வாங்கவேண்டிய தேவை இல்லை. தங்கம் சார்ந்த முதலீட்டு திட்டங்களாகக் கோல்ட் இ.டி.எப், கோல்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்தால் போதுமானது.

அதுபோல இப்போது ரியல் எஸ்டேட்டிலும் ஒரு திட்டத்தைக் கொண்டுவருவதற்கான வரைவினைப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி கொண்டு வந்திருக்கிறது. இது சம்பந்தமாக 58 பக்க அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2008ஆம் ஆண்டே இதற்கான முதல் அடியை எடுத்துவைத்தாலும், அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு, இப்போது இறுதி வடிவத்தை எட்டி இருக்கிறது.

கிட்டத்தட்ட மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட்களைப் போலவே இந்த ஃபண்ட்களும் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும். இந்தத் திட்டத்தின் படி யூனிட்களை எளிதாக வாங்கவோ விற்கவோ முடியும். இந்தத் திட்டம் வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே செயல்பட்டுவருகிறது.

இந்தத் திட்டம் சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு நல்லது என்பது பெரும்பாலான நிபுணர்கள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

இதை ஆரம்பிப்பதற்குச் செபியிடம் விண்ணப்பிக்க அனுமதி வாங்க வேண்டும். இதற்காக குறைந்தபட்சம் 1000 கோடி அளவுக்குச் சொத்து மதிப்பு இருக்க வேண்டும், முறையான ஃபண்ட் மேனேஜர்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகள் இருக்கிறது.

மேலும் இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியை 90 சதவிகிதம் முடிக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றும் செபி சொல்லி இருக்கிறது.

சிறுமுதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் என யாரிடமும் இந்த ஃபண்ட் நிதியைத் திரட்டலாம் என்று சொல்லி இருக்கிறது. இந்த திட்டம் குறித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதிவரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கருத்துகள் கேட்ட பிறகு விதிமுறைகளை செபி அறிவிக்கும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்