தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை- அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொணடனர்.

அப்போது செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் தெரிவித்தது:

ராசா மிராசுதார் மருத்துவமனையில் 700 கிராம் எடையுள்ள குழந்தைகள் பிறந்தாலும், அக்குழந்தைகளை இங்குள்ள சிசுக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சராசரி எடையான 3 கிலோ வரும் வரை பராமரிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இங்கு ஒரே நேரத்தில் 14 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ரூ.6.82 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் தமிழக முதல்வரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (multi speciality hospital) விரைவில் கட்டப்பட்டு நோயாளிகளுக்கு உலகத் தரத்துக்கு சிகிச்சைகள் வழங்கப்படும். இதற்கான இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.

ரூ.429 கோடி வருவாய்

இங்கு, தமிழக அரசின் விரிவான மருத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் 22 வார்டுகளில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19,900 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதன் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதிலிருந்து ரூ.13 கோடி தொகை நவீன மருத்துவக் கருவிகள் வாங்கவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் செலவிடப்படும். விரிவான மருத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக அளவில் 5 லட்சம் பேரும், அரசு மருத்துவமனைகளில் 2 லட்சம் பேரும் பயன்பெற்றுள்ளனர்.

இவற்றின் மூலம் அரசு மருத்துவமனைகள் ரூ.429 கோடி வருவாய் ஈட்டியுள்ளன.

70.29 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியால் போலியோ இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 43,051 மையங்கள், 1,000 நடமாடும் மையங்கள், 1,652 பொதுமக்கள் கூடும் இடங்கள் மூலம் 70.29 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்றார் விஜயபாஸ்கர்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.ரங்கசாமி, எம்.ரத்தினசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் அமுதாராணி, நகர்மன்றத் தலைவர் சாவித்திரி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கி.மகாதேவன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, டாக்டர் சிங்காரவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எய்ம்ஸ் வல்லுநர்களின் நேரடி கண்காணிப்பில்..

மத்திய அரசின் நிதி ரூ.120 கோடி, மாநில அரசின் நிதி ரூ.30 கோடி என மொத்தம் ரூ.150 கோடியில் கட்டப் படவுள்ள இந்த பல்நோக்கு மருத்துவமனை வளாகக் கட்டிடத்துக்கான அனுமதியை மத்திய அமைச்சரவை அண்மையில் வழங்கியதாகவும், விரைவில் மத்திய அரசின் குழுவினர் தஞ்சைக்கு வந்து பார்வையிட்ட பின்னர் பணிகள் தொடங்கப்படும் எனவும், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுநர்களின் நேரடி கண்காணிப்பில் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெறும் எனவும் மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்