என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

By செய்திப்பிரிவு

கே. சந்தோஷ்குமார் - மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினர், தே.மு.தி.க. :

ஆந்திர மாநிலத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மின்சாரம், உயர் அழுத்த மின் கோபுரங்கள் மூலமாகக் கொண்டுவரப்படுகிறது. இந்தக் கோபுரங்களை அமைப்பதில் அரசியல் தலையீடு உள்ளது. இந்தக் கோபுரங்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர் நிலத்தில் அமைக்கப்படுவதில்லை; சாதாரண மக்களின் நிலங்களில்தான் அமைக்கப்படுகின்றன. கோபுரங்கள் அணிவகுத்துள்ள பாதை வளைந்து நெளிந்து செல்வதே இதன் பின் உள்ள அரசியலை உணர்த்தும். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்துத் தொகுதி எம்.பி-யிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.

ப. விஜயன் - ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர், பா.ம.க. :

தொகுதித் தலைமையிடமான ஸ்ரீபெரும்புதூரில், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இல்லை. எம்.பி-யான டி.ஆர். பாலு கடந்த 2009-ல் வாக்கு சேகரிக்க வந்ததோடு சரி. அதன் பின் ஸ்ரீபெரும்புதூர் பக்கம் பெரும்பாலும் வந்ததில்லை. தொகுதியில் அடிப்படை வசதி இல்லாத பேருந்து நிலையம், மோசமான கிராமச் சாலைகள், குடிநீர்த் தட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எம்.பி. பெரும்பாலும் டெல்லியிலேயே இருப்பதால், இவற்றை எல்லாம் சொல்ல முடிவதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்