தயாரியுங்கள் தரவரிசைப் பட்டியல்

By ஜெயபிரகாஷ் காந்தி

அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பொதுத் தேர்வுக்கு முன்பாகவே முக்கிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது. பொறியியல் படிக்க விரும்புவோர் ஐ.ஐ.டி., ஜே.இ.இ. நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் டிசம்பர் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் தடை செய்துவிட்டது. எனவே, மருத்துவம் படிக்க விரும்புவோர் அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் டிசம்பர் மாதம் அதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.

வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும். தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும். சிலவற்றில் மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடக்கும். அவற்றுக்கும் முன்னதாகவே விண்ணப்பிப்பது அவசியம். பொதுவாக மருத்துவம், பொறியியல் என்று வேறுபாடு பார்க்காமல் அனைத்து நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிப்பதே பாதுகாப்பு. ஒன்று கைநழுவினாலும் இன்னொன்று கைகொடுக்கும்.

மாணவர்கள் பட்ட மேற்படிப்பை தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம். அதற்கு சிறந்த கலந்தாலோசனைகள் உதவும். கல்லூரிகளின் கவர்ச்சிகரமான விளம்பரம், பிரமாண்ட உள்கட்டமைப்பைப் பார்த்து மயங்கிவிட வேண்டாம். கல்லூரியில் சிறந்த பேராசிரியர்கள் இருக்கிறார்களா? தரமான கல்வி கற்பிக்கப்படுகிறதா? வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் இல்லாமல் வெளியுலகில் நிகழும் துறைகளின் வளர்ச்சியைக் கவனித்து அதற்கேற்ப மேம்படுத்தப்பட்ட கல்வியை அளிக்கிறார்களா? வேலைவாய்ப்புக்கு அளிக்கும் முக்கியத்துவம் - இவற்றை எல்லாம் தீர விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் இணையதளங்களை ஆராய்ந்து அந்தத் தகவல்களை இணையத்திலேயே குறுக்கு ஆய்வு செய்யுங்கள்.

கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு அவற்றின் தரவரிசைப் பட்டியலும் உங்களுக்கு உதவும். கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை முன்பு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதற்கும் தடை விதிக்கப்பட்டதால் இனி நீங்கள்தான் தர வரிசைப் பட்டியலை தயாரிக்க வேண்டும்.

கல்லூரியின் தேர்ச்சி விகிதம், ஆய்வு வசதிகள், பயிற்சி வசதிகள், வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை, நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே வேலை கிடைத்ததா என்பதை எல்லாம் ஆராய்ந்து தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.

இவ்வளவு வேலைகள் இருப்பதால் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு முன்னதாகவே இந்த வேலைகளைத் தொடங்கிவிடுவது நல்லது.

இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்பவர்களுக்கு, ஆம்! மெனக்கெடத்தான் வேண்டும். ஏனெனில் இதுவே உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்