இறந்து பிறந்த குழந்தையை 5 ஆண்டுகளாக லாக்கரில் பூட்டி வைத்த தாய்

By ஏஎஃப்பி

இறந்து பிறந்த குழந்தையை 5 வருடங்களாக லாக்கரில் பூட்டி வைத்திருந்த 49 வயது தாய் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டோக்கியா காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''சம்பந்தப்பட்ட பெண் கடந்த ஐந்து ஆண்டுகளாக லாக்கரின் உள்ளே குழந்தையின் உடலை வைத்துள்ளார்.

உயிருள்ள குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை என்பதால் பயந்ததாகவும் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாது என்பதால், உடலை லாக்கரில் வைத்ததாகவும் அப்பெண் கூறினார்.

வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்த பெண், வீட்டில் இருந்து தன்னுடைய லாக்கரின் சாவியை எடுக்க மறந்துவிட்டார். இதனால் யாராவது சாவியைக் கொண்டு லாக்கரைத் திறக்கலாம்; அதனால் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று பயந்த பெண், காவல்துறையிடம் நடந்தவற்றைக் கூறினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்