Published on : 31 Mar 2025 18:44 pm
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் சக்கர நாற்காலியில் இருந்தபடி ஐபிஎல் ஆடுகளத்தில் தனது அணியினருக்கு அறிவுரைகள் வழங்கியது ரசிகர்களை நெகிழவைத்தது.
2025 ஐபிஎல் சீசனுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த உள்ளூர் போட்டியின்போது ராகுல் திராவிட்டுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே சக்கர நாற்காலியில் இருந்தபடியே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார் ராகுல் திராவிட்.
ராஜஸ்தான் ராயல்ஸிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி அடைந்தபிறகு, ராகுல் திராவிட் அருகே சென்று தோனி நலம் விசாரித்துப் பேசியதும் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.