Published on : 27 Mar 2025 21:01 pm
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தின்போது இசையமைப்பாளர் தமன் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தார். | படங்கள்: கிரி கேவிஎஸ்
லக்னோ கேப்டன் பந்த் மற்றும் ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசன் கடந்த 22-ம் தொடங்கியது. மொத்தம் 13 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
அந்த வகையில் ஹைதராபாத்தில் இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில் தமன் பங்கேற்றார்.
ஒவ்வொரு மைதானத்திலும் சிறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் தமன்.
இந்த நிலையில் ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியில் தமன் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
தனம் இசை நிகழ்வுக்கு ஹைதரபாத் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தின் மூலம் தமன் மைதானத்தை வலம் வந்தார்.