Published on : 22 Mar 2025 21:31 pm
ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பலப்பரீட்சை செய்தன.
இதன் தொடக்க நிகழ்வில் நடிகர் ஷாருக்கான், பாடகர் ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி என பாலிவுட் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.
‘உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிகழ்வு’ என ஐபிஎல் கிரிக்கெட்டை ஷாருக்கான் தெரிவித்தார். அவர் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகர் ஸ்ரேயா கோஷல் தனது ஹிட் பாடல்களை பாடி அசத்தினார். குறிப்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் அனைவரையும் ஈர்த்தது.
கரண் அவுஜ்லா தனது பஞ்சாபி பாடல்களை பாடி அசத்தினார்.
நடிகை திஷா பதானி நளினம் பொங்க நடனமாடி ரசிகர்களை ஈர்த்தார்.
‘கிரிக்கெட் உலகின் அரசன்’ என கோலியை குறிப்பிட்டார் ஷாருக்கான். அவர்கள் இருவரும் மேடையில் இணைந்து நடனமாடி இருந்தது பார்வையாளர்களை குஷி ஆக்கியது.