Published on : 22 Mar 2025 18:21 pm
ஐபிஎல் வரலாற்றில் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி.
பேட்டிங், பவுலிங்கில் பலத்துடன் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையில் ஐபிஎல் 2025 சீசனில் எழுச்சியுடன் களம் காண்கிறது ஆர்சிபி.
ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது பலம் சேர்க்கும். யாஷ் தயாளும் மிக முக்கியமானவர்.
பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவும் அணிக்கு தெம்பூட்டக் கூடியவர்கள்.
குறிப்பாக, சாம்பியன்ஸ் டிராபி தொடர் மூலம் கோலி சிறந்த ஃபார்மில் இருப்பது, கோப்பை கனவை மெய்ப்பிக்க உதவும் என நம்பலாம்.
ஆர்சிபி அணியில் தங்கியவர்கள்: விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5 கோடி).