Published on : 15 Mar 2025 17:58 pm

குஜராத் டைட்டன்ஸ் எப்படி? - ஒரு ப்ரிவ்யூ பார்வை

Published on : 15 Mar 2025 17:58 pm

1 / 8

ஐபிஎல் 2025-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வலுப்படுத்தும் விதமாக மெகா ஏலத்தில் அதிரடி முடிவுகளை குஜராத் அணி உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.

2 / 8

ஷமி, நூர் அகமது, டேவிட் மில்லரை வெளியேற்றிவிட்டு ஜாஸ் பட்லர், காகிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெரால்டு கோட்ஸியை ஏலம் எடுத்தனர். 

3 / 8

வேகப்பந்து வீச்சுக்காக முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணாவை  அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். வாஷிங்டன் சுந்தரின் வரவும் குஜராத் அணிக்கு மிக முக்கியமானது. 

4 / 8

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி படைக்குப் பக்கபலமாக ஆல்ரவுண்ட ரஷித் கான் மிரட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.

5 / 8

சாய் சுதர்ஷன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா நடுவரிசை பேட்டிங்கில் பலம். தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் களமிறங்குவதும் பலம்.

6 / 8

ஜாஸ் பட்லர், காகிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரஷித் கான் ஆகியோர் இந்த சீசனில் விளையாடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களாக நிச்சயமாக இடம்பெறுவர்.

7 / 8

ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜாஸ் பட்லர் தொடக்க வரிசையில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர் என்பது கவனிக்கத்தக்கது. 

8 / 8

வெற்றிகரமான வேகப் பந்துவீச்சாளர் ரபாடா, ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் குஜராத் அணிக்கு கூடுதல் பலம்.

Recently Added

More From This Category

x