Published on : 15 Mar 2025 17:01 pm
ஐபிஎல் போட்டிகளுக்கு எப்போதும் தனிப்பட்ட வரவேற்பு இருப்பதால், அதன் விளம்பர வருவாய் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரிக்கிறது.
ஐபிஎல் 2025 தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் டிவி, டிஜிட்டல் ஊடகங்களின் வாயிலாக விளம்பரங்கள் அணிவகுக்க உள்ளன.
இந்த விளம்பரங்கள் மூலம் ரூ.6,000 கோடி வருவாய் ஈட்டப்பட வாய்ப்பு உள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
2024 ஐபிஎல் போட்டிகள் மூலமாக ரூ.3,900 கோடி அளவில் விளம்பர வருவாய் கிடைத்தது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்பைவிட அதிக வரவேற்பு உள்ளதால், விளம்பர வருவாய் 58% அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பீடு செய்கின்றனர்.
டிஜிட்டல் ஊடகத்திடம் இருந்து 55% வருவாயும், டிவி மூலமாக 45% வருவாயும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் டி-20 தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி மே 25-ம் தேதி நடைபெற உள்ளது.