Published on : 19 Jul 2024 16:19 pm

இந்தியாவின் தடகள நம்பிக்கைகள் @ பாரிஸ் ஒலிம்பிக் 2024

Published on : 19 Jul 2024 16:19 pm

1 / 9
33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 29 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
2 / 9
ஜோதி யார்ராஜி: ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜோதி யார்ராஜி.
3 / 9
அவினாஷ் சேபிள்: ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் கலந்து கொள்கிறார் அவினாஷ் சேபிள். பாரிஸ் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் பந்தய தூரத்தை 8:09.91 நிமிடங்களில் அடைந்து தேசிய சாதனை படைத்தார்.
4 / 9
நீரஜ் சோப்ரா: ஆடவருக்கான ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா தற்போது உலக சாம்பியனாகவும் உள்ளார். இம்முறையும் பதக்கம் வெல்லக்கூடியவராக திகழ்கிறார்.
5 / 9
கிஷோர் குமார் ஜெனா: ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவுடன் நம்பிக்கை அளிக்கக் கூடியவராக கிஷோர் குமார் ஜெனா உள்ளார். 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 5-வது இடம் பிடித்தார்.
6 / 9
பருல் சவுத்ரி: மகளிருக்கான 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பருல் சவுத்ரி பங்கேற்கிறார். 2023 புடாபெஸ்ட் போட்டியில் 3000 மீட்டர் பிரிவில் 9:15.31 நிமிடங்களில் இலக்கை எட்டி தேசிய சாதனை படைத்தார்.
7 / 9
ஜெஸ்வின் ஆல்ட்ரின்: தமிழகத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் களமிறங்குகிறார். 2023 ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
8 / 9
தஜிந்தர்பால் சிங் தூர்: ஆடவருக்கான குண்டு எறிதலில் பங்கேற்கிறார் தஜிந்தர்பால் சிங் தூர். அவர், ஆசிய அளவிலான சாதனையை (21.77 மீட்டர்) தன்வசம் வைத்துள்ளார்.
9 / 9
அன்னு ராணி: மகளிருக்கான ஈட்டி எறிதலில் பங்கேற்கும் அன்னு ராணியின் சிறந்த செயல்திறன் 63.24 மீட்டர் தூரம் ஆகும். 2022 ஆசிய விளையாட்டு போட்டியில் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

Recently Added

More From This Category

x