1 / 9
ஐபிஎல் 2024 சீசனில் அதிக சதங்களை பதிவு செய்த வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பட்லர் உள்ளார். மொத்தமாக அவர் 2 சதங்கள் பதிவு செய்துள்ளார். இந்த சீசனில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரராக டிராவிஸ் ஹெட் உள்ளார். 39 பந்துகளில் அவர் சதம் எட்டி அசத்தினார்.
2 / 9
அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உள்ளார். அவர் 42 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இரண்டாவது இடத்தில் 38 சிக்ஸர்களுடன் கோலி மற்றும் கிளாசன் ஆகியோர் உள்ளனர். ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை பதிவு செய்த வீரராக வில் ஜேக்ஸ் (10 சிக்ஸர்) உள்ளார்.
3 / 9
அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. மொத்தம் 741 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 61.75. ருதுராஜ், ரியான் பராக், ஹெட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
4 / 9
அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர்களின் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தமாக 62 பவுண்டரிகளை பதிவு செய்துள்ளார். கோலி, ருதுராஜ், ஜெய்ஸ்வால், சுனில் நரைன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒரே இன்னிங்ஸில் அதிக பவுண்டரி பதிவு செய்த வீரராக கொல்கத்தா வீரர் பில் சால்ட் உள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 14 பவுண்டரிகளை அவர் பதிவு செய்தார்.
5 / 9
ரஜத் பட்டிதார், சஞ்சு சாம்சன், விராட் கோலி என மூவரும் ஐந்து அரை சாதங்களை இந்த சீசனில் பதிவு செய்தனர். இதில் குறைந்த பந்துகளில் ஆடி ஐந்து அரை சதங்களை பதிவு செய்த ஆர்சிபி வீரர் பட்டிதார் முதலிடத்தில் உள்ளார்.
6 / 9
சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவுலர் ஹர்ஷல் படேல் உள்ளார். மொத்தமாக 24 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். வருண் சக்கரவர்த்தி, பும்ரா, நடராஜன், ஹர்ஷித் ராணா, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ரசல், கம்மின்ஸ், சஹல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
7 / 9
அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் மற்றும் கலீல் அகமது உள்ளனர். இருவரும் 2 ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் வீசியுள்ளனர். இதில் எக்கானமி அடிப்படையில் புவனேஷ்வர் முதலிடத்தில் உள்ளார்.
8 / 9
அதிக டாட் பந்துகள் வீசிய பவுலர்களில் மும்பை இந்தியன்ஸின் பும்ரா முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 149 டாட் பந்துகளை அவர் வீசியுள்ளார். போல்ட், புவனேஷ்வர், கலீல் அகமது, சீராஜ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
9 / 9
ஒரே ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் ராஜஸ்தான் பவுலர் சந்தீப் சர்மா. பும்ரா மற்றும் லக்னோவின் யஷ் தாக்குர் ஆகியோரும் இந்த சீசனில் ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.