1 / 24
நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி.
2 / 24
9.5 ஓவர்கள் வீசிய ஷமி, 57 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமிக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
3 / 24
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸில் 5+ விக்கெட்களை ஷமி கைப்பற்றி உள்ளார்.
4 / 24
உலகக் கோப்பையில் அதிக முறை 5+ விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும் அவர் (ஒட்டுமொத்தமாக 4 முறை) திகழ்கிறார்.
5 / 24
உலகக் கோப்பையில் மிக வேகமாக 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 17 போட்டிகளில் 50+ விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் ஷமி.
6 / 24
உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பவுலராகவும் திகழ்கிறார். இதற்கு முன்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் எவரும் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியது கிடையாது.
7 / 24
நடப்பு உலகக் கோப்பையில் 23 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரராக உள்ளார்.
8 / 24
உலக அளவில் இந்த சாதனையை முறியடிக்க இரண்டு ஆஸ்திரேலியர்களை முந்த வேண்டும். 2019 உலகக் கோப்பையில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் ஸ்டார்க் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் க்ளென் மெக்ராத் இருக்கிறார். அவர் 2007 உலகக் கோப்பையில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
9 / 24
இந்தப் போட்டிக்குப் பிறகு ஷமி கூறியது: “நான் எனது முறைக்காக (Turn) காத்திருந்தேன். ஷார்ட்டர் ஃபார்மெட் கிரிக்கெட்டில் நான் அதிகம் விளையாடவில்லை. நாங்கள் யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகள் போன்ற பல விஷயங்கள் குறித்து பேசினோம். புதிய பந்தில் விக்கெட்களை வீழ்த்த முயற்சித்தேன். அதற்காக நிறைய பயிற்சி செய்தேன்.
10 / 24
இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சனின் கேட்ச்சை நழுவ விட்டேன். அப்போது மிகவும் மோசமான மன நிலையில் இருந்தேன். அவர்கள் சிறப்பாக பேட் செய்தனர். நான் எனது சான்ஸை எடுத்து பார்க்க விரும்பினேன். விக்கெட் சிறப்பாக இருந்தது. நாங்கள் பதிவு செய்த ரன்கள் போதுமானதாக இருந்தது.
11 / 24
மைதானத்தில் பனிப்பொழிவு இல்லை. இது சிறந்த பிளாட்பார்ம். நாங்கள் 2015 மற்றும் 2019 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் தோல்வியை தழுவினோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பினேன். ஏனெனில், மீண்டும் இது போன்ற வாய்ப்பு நமக்கு எப்போது வரும் என்று தெரியாது” என ஷமி தெரிவித்தார்.
12 / 24
அரை இறுதியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், புதிய சாதனை படைத்த விராட் கோலிக்கும், வெற்றிக்கு உறுதுணைபுரிந்த ஷமிக்கும் பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
13 / 24
நடிகர் ஷாருக்கான்: “டீம் ஸ்பிரிட் மற்றும் சிறப்பான ஆட்டத்தின் என்னவொரு காட்சி. இறுதிப் போட்டியில் வெல்வதற்கு வாழ்த்துகள் இந்தியா!”
14 / 24
இயக்குநர் ராஜமவுலி: “சாதனைகள் உடைக்கப்பட வேண்டியவைதான். ஆனால் சச்சின் தனது ஓய்வை அறிவித்தபோது, அவரது சாதனை உடைக்கப்படும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். சூப்பர் செவன் ஷமி. ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தைக் காண காத்திருக்கிறேன்.”
15 / 24
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்: “அதிக ஸ்கோர்கள் கொண்ட ஒரு ஆட்டத்தில் பவுலர் ஒருவர் ஆட்டநாயகனாக ஆவதன் சாத்தியங்கள் என்ன? ஏழு விக்கெட்களை குவித்த ஷமிக்கும், அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் வாழ்த்துகள்.”
16 / 24
நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா: “அபாரமான வெற்றி! நாம இறுதிப் போட்டியில் நுழைந்துவிட்டோம். இந்த போட்டியின் நடுவே சிறிய தடங்கல்கள் இருந்தன. இப்போது இதனை வெற்றிகொள்ள நாம தயாராகிவிட்டோம். இந்த ஆதிக்கம் இதுவரை யாரும் செய்யாதது.”
17 / 24
இயக்குநர் மதுர் பண்டார்கர்: “இன்று விராட் கோலியின் 50வது ODI சதத்தை காண்பது பெரும் கவுரவம். அவருடைய அர்ப்பணிப்பு, திறமை, ஸ்போர்ட்மேன்ஷிப் அனைத்தும் உண்மையில் பிரமிக்கவைக்கிறது. அவருக்கு ஒரு மிகப்பெரிய வாழ்த்து.”
18 / 24
நடிகர் ஜூனியர் என்டிஆர்: “உடைக்கமுடியாத சாதனை. ஒரு இந்தியரால் உடைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தியாவிலேயே. உலகக் கோப்பை அரையிறுதியில். இதை விட சிறப்பான விஷயம் எதுவும் இருக்க முடியாது. வாழ்த்துகள் கோலி!”
19 / 24
நடிகர் மோகன்லால்: “உலகக் கோப்பை அரை இறுதியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! சாதனை படைத்த விராட் கோலிக்கு, ஷமியின் மாஸ்டர்கிளாஸ் ஆட்டத்துக்கும் வாழ்த்துகள். இதை இப்படியே தொடர்ந்து, இறுதிப் போட்டியிலும் வரலாறு படைப்போம்.”
20 / 24
இயக்குநர் ரிஷப் ஷெட்டி: “இது ‘ஷமி ஃபைனல்’.. இந்திய அணிக்கு வாழ்த்துகள்!”
21 / 24
படங்கள்: இமானுவேல் யோகனி
22 / 24
23 / 24
24 / 24