1 / 21
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை நியூஸிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்ற அரை இறுதி ஆட்டத்தில், அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 106 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது.
2 / 21
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்திருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. இந்த மைல்கல் சாதனையை விராட் கோலி தனது 279-வது இன்னிங்ஸில் நிகழ்த்தி உள்ளார்.
3 / 21
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி.
4 / 21
இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் அதுவும் அவரது சொந்த மைதானத்திலேயே விராட் கோலி நிகழ்த்தியது, அத்தருணத்தை மேலும் அழகாக்கியது.
5 / 21
இதே மைதானத்தில்தான் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கடைசியாக பேட்டிங் செய்தார். அதே நாளில் தற்போது விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
6 / 21
சச்சின் டெண்டுல்கரின் சதங்களின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி, அவரது மேலும் ஒரு சாதனையையும் தகர்த்துள்ளார்.
7 / 21
உலகக் கோப்பை தொடரில் ஒரே பதிப்பில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. அவர், 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 673 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி இதுவரை 711 ரன்கள் குவித்துள்ளார்.
8 / 21
உலகக் கோப்பை தொடரில் ஒரே பதிப்பில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. அவர், 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 673 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி இதுவரை 711 ரன்கள் குவித்துள்ளார்.
9 / 21
உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி சதம் விளாசினார். உலகக் கோப்பை தொடர்களில் இது அவரது 5-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் குமார் சங்ககரா, ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார் விராட் கோலி. இந்த வகை சாதனையில் 7 சதங்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்திலும், சச்சின் 6 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
10 / 21
சதம் விளாசிய விராட் கோலி மைதானத்தில் இருந்தபடி சச்சினை நோக்கி தலை வணங்கினார். கேலரியில் இருந்த சச்சின் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தார்.
11 / 21
போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி, "இன்று என் மனைவி என் முன் இருந்தார். எனக்கு ரொம்பவே பிடித்த என்னுடைய ஹீரோ சச்சின் என் முன் இருந்தார். அவர்கள் முன் இப்படியொரு தருணம். என்னால் இதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையை ஓர் ஓவியமாக வரைந்தால் இந்தத் தருணத்தைத்தான் காட்சிப்படுத்த விரும்புவேன்" என்று உருக்கமாக கூறினார்.
12 / 21
படங்கள்: இமானுவேல் யோகனி
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21