1 / 28
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா போல காட்சி அளிக்கிறது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அகமதாபாத் - நரேந்திர மோடி மைதானம். | படங்கள்: விஜய் சோனேஜி, ஆர்.தீபக்
2 / 28
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து தற்போது விளையாடி வருகிறது.
3 / 28
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியைக் காண மைதானத்தின் வாயிலில் முற்பகல் 11.30 மணி அளவில் ரசிகர்கள் பெருமளவில் கூடியிருந்து ஆரவாரம் செய்தனர்.
4 / 28
நரேந்திர மோடி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தேசிய கொடியுடன் குவிந்ததால் வீதியே கரகோஷத்தில் விழாக்கோலம் பூண்டது. பலத்த சோதனைகளுக்குப் பிறகே ரசிகர்களை காவல் துறையினர் மைதானத்துக்குள் அனுமதித்தனர்.
5 / 28
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
6 / 28
உலகக் கோப்பையின் துவக்க நாளில்தான் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இடையில் நடைபெறும் ஒரு போட்டிக்காக (இந்தியா - பாகிஸ்தான்) இவ்வாறு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
7 / 28
சுமார் 12.30 மணி அளவில் பாடகர்கள் சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோர் மைதானத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
8 / 28
இந்த இசை நிகழ்ச்சி அரங்கில் உள்ள பார்வையாளர்கள் கண்டுகளிக்க மட்டுமே தவிர, ஒளிபரப்பப்படாது என ஸ்டார் ஸபோர்ட்ஸ் தெரிவித்திருந்தது. அதனால், அந்த நிகழ்ச்சிகள் டிவியில் ஒளிபரப்பாகவில்லை.
9 / 28
அசம்பாவிதங்களை தவிர்க்க நரேந்திர மோடி மைதானத்தின் நுழைவாயிலில் உயர்மட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
10 / 28
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலக கோப்பை தொடர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
11 / 28
7 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாடுகிறது. இதனால், இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 / 28
காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது பலமாக பார்க்கப்படுகிறது.
13 / 28
இந்திய அணி ப்ளேயில் லெவன்: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
14 / 28
பாகிஸ்தான் ப்ளேயிங் லெவன்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
15 / 28
16 / 28
17 / 28
18 / 28
19 / 28
20 / 28
21 / 28
22 / 28
23 / 28
24 / 28
25 / 28
26 / 28
27 / 28
28 / 28