1 / 26
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது.
2 / 26
உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு மைதானத்தின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3 / 26
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் தான் நரேந்திர மோடி மைதானம். கடந்த 2021ம் ஆண்டு இந்த மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என மாற்றம் செய்யப்பட்டது.
4 / 26
உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் அமைந்துள்ள மோடேரா ஸ்டேடியம் புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. 1.10 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் வசதி கொண்டது இந்த மைதானம்.
5 / 26
இதற்கு முன்னர் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானமே பெரிய மைதானமாக கருதப்பட்டு வந்தது. இந்த மைதானம் முறியடித்திருந்தது.
6 / 26
800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், இந்த அரங்கத்தை கட்டியது. மோட்டேரா எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த அரங்கம், 2021ம் ஆண்டு நரேந்திர மோடி விளையாட்டரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
7 / 26
இந்த மைதானம் 63 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானமானது ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிக்கு பயன்படுத்தப்படும் மைதானத்தின் அளவை போன்று 32 மடங்கு பெரியது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
8 / 26
இந்த அரங்கத்தில் 40 விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடம் உட்பட ஒரு உட்புற கிரிக்கெட் அகாடமி உள்ளது. முன்னதாக, 1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரங்கம் ஆரம்பத்தில் 49,000 பேர் அமரக்கூடியதாக இருந்தது.
9 / 26
இது நான்கு அணிகளுக்கு இடமளிக்கும் அளவுக்கு பெரிய டிரஸ்ஸிங் அறைகளையும் கொண்டுள்ளது. இதில் ஒரு அதிநவீன ஜிம் மற்றும் ஆறு உட்புற பயிற்சி பிட்சுகள் மற்றும் மூன்று வெளிப்புற பயிற்சி இடங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளைக்கொண்டுள்ளது.
10 / 26
1983-84ம் ஆண்டு இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இந்த அரங்கத்தில் தான் நடைபெற்றது. முதல் சர்வதேச ஒருநாள் போட்டி 1984-85ம் ஆண்டு இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே இந்த மைதான்னத்தில் நடைபெற்றது. கடைசி ஒருநாள் போட்டி இலங்கைக்கு எதிராக 2014ல் இருந்தது.
11 / 26
தற்போது உலகக்கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன. இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையேயான உலகக்கோப்பையில் முதல் போட்டி இந்த மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது.
12 / 26
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 14ம் தேதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
13 / 26
இதையடுத்து மைதானத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. |
படங்கள்: விஜய் சோனேஜி
14 / 26
15 / 26
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26
21 / 26
22 / 26
23 / 26
24 / 26
25 / 26
26 / 26