ஆடுகளத்தில் பிரதமர் மோடி - ஆல்பம்
Published on : 09 Mar 2023 19:24 pm
1 / 14
குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்தியப் பிரதமர் மோடி நேரில் கண்டு ரசித்தார். | படங்கள்: விஜய் சோனிஜி
2 / 14
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸும் பார்வையிட்டனர்.
3 / 14
இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
4 / 14
இன்று காலை 8.45 மணி அளவில் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து மைதானத்துக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், இருவரும் மைதானத்திற்குள் சென்றனர். அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் நின்றவாறு இருவரும் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
5 / 14
போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தேசிய கீதம் பாடி இருந்தார். அப்போது மைதானத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு இந்தியரும் தேசிய கீதம் பாடினர்.
6 / 14
இருவரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியின் தொடக்க ஆட்டத்தை பார்த்து ரசித்தனர்.
7 / 14
8 / 14
9 / 14
10 / 14
11 / 14
12 / 14
13 / 14
14 / 14