Published on : 11 Feb 2025 13:49 pm
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். | படங்கள்: என்.ராஜேஷ்
திருத்தணி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்: தைப்பூசத்தை முன்னிட்டு முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு: பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க, சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம், விமரிசையாக இன்று (பிப்.11) நடந்தது.
கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திண்டுக்கல்: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தியும் பால்குடம், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பழநி வந்த பக்தர்கள். படங்கள்: நா.தங்கரத்தினம்
பழநி மலை கோயிலுக்கு செல்போன் கொண்டுவர தடை உள்ள நிலையில், கருவறை முன்பு உள்ள பாரா வேல் மண்டபத்தில் செல்போன் வைத்து படம் எடுக்கும் பக்தர்கள்.
நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.
பழநி பேருந்து நிலையத்தில் தங்கள் ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்த பக்தர்கள்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கிரி வீதியில் காவடியாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்று நடனமாடி சுற்றி வந்த பக்தர்கள்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தியும், பால்குடம், காவடிகள் எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற பழநி வந்த பக்தர்கள்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
பழநி கிரி வீதியில் பூட்டப்பட்டிருந்த செல்போன் வைப்பு அறை.
வெயிலின் தாக்கத்தை குறைக்க பழநி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் லாரி மூலம் ஊற்றப்பட்ட தண்ணீர்.
பழநி பேருந்து நிலையம் அருகே குளத்து சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த பேருந்துகள்.
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு கோவை மருதமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள். படங்கள்: ஜெ.மனோகரன்