அஷ்டமியில் கஷ்டம் தீர... கால பைரவர் வழிபாடு!
Published on : 11 Sep 2024 16:25 pm
1 / 10
அஷ்டமியில், கஷ்டமெல்லாம் தீர்த்து வைக்கும் பைரவரை தரிசித்து பிரார்த்தனை செய்தால், நம்முடைய பயத்தையெல்லாம் போக்கி அருளுவார் பைரவர்.
2 / 10
பைரவரின் மூலமந்திரம் சொல்லி பாராயணம் செய்து, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளித்தால் கடன் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் வலுவிழப்பர் என்பது ஐதீகம்.
3 / 10
ஒவ்வொரு நாளும் திதி உண்டு. முருகனுக்கு உகந்தது சஷ்டி திதி. சஷ்டியில் முருகக் கடவுளை நினைத்து விரதம் இருப்பார்கள். பூஜிப்பார்கள். கந்தனை தரிசிப்பார்கள்.
4 / 10
சதுர்த்தசி பிள்ளையாருக்கு விசேஷம். இதைத்தான் ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி என்றும் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடுகிறோம்.
5 / 10
ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாளில் பெருமாள் வழிபாடு மிக மிக உன்னதமானது. துளசி தீர்த்தம் பருகுவதும் புண்ணியங்களைப் பெற்றுத் தரும்.
6 / 10
திரயோதசி என்பது சிவ வழிபாட்டுக்கு உரிய நாள். இதுவே பிரதோஷம் என்று வழிபடப்படுகிறது. சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
7 / 10
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்கவிடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது.
8 / 10
அஷ்டமி, பைரவர் பெருமானுக்கான நாள். நம்மைச் சுற்றியுள்ள எட்டுத்திசைகளில் இருந்தும் வருகிற தீய சக்திகளை விரட்டி அருளும் வல்லமை கொண்டவர் பைரவர்.
9 / 10
தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டுக்கு உகந்தது என்றாலும் வளர்பிறை அஷ்டமியும் பைரவருக்கான நன்னாள்தான்.
10 / 10
பொதுவாகவே பைரவரை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு. ஆனால், வளர்பிறை அஷ்டமி திதியில் ராகுகாலத்தை கணக்கில் கொள்ள வேண்டாம். எந்த நேரத்திலும் வழிபடலாம். | தொகுப்பு: வி.ராம்ஜி