Published on : 06 Sep 2024 17:44 pm

விநாயகருக்கு அபிஷேகங்கள் - பலன்கள் என்னென்ன?

Published on : 06 Sep 2024 17:44 pm

1 / 9

ஆனைமுகனுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால், அளவற்ற செல்வங்களைத் தந்தருள்வார் என்பது உறுதி.

2 / 9

விநாயக சதுர்த்தி நாளில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து பிரார்த்தனை செய்யுங்கள். சரி... என்னென்ன அபிஷேகம்? என்னென்ன பலன்கள் என பார்ப்போம்...
 

3 / 9

விநாயக சதுர்த்தி நாளில் பிள்ளையாரப்பனுக்கு பாலபிஷேகம் செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து பாலபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.
 

4 / 9

பிள்ளையாரப்பனுக்கு, சந்தன அபிஷேகம் செய்வது மகா விசேஷம். பொதுவாகவே பிள்ளையாருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்.
 

5 / 9

விநாயக சதுர்த்தி பெருநாளில் பிள்ளையாருக்கு தேனபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீட்டில் நிம்மதியும் அமைதியும் குடிகொள்ளும்.

6 / 9

கணபதிக்கு விபூதி அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம். காரியத்தில் தடை, கல்யாணத் தடைக்கு விபூதி அபிஷேகம் செய்தால், தடைகள் யாவும் தவிடுபொடியாகும். 

7 / 9

மஞ்சளால் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தால், மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
 

8 / 9

அன்னத்தால் ஆனைமுகனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், இல்லத்தில் இனிதான சம்பவங்கள் நிகழும். தனம் தானியம் பெருகும். வீட்டில் சுபிட்சம் நிலவும்.
 

9 / 9

விநாயக சதுர்த்தி நாளில், ஆனைமுகனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். சகல சம்பத்துகளையும் பெற்று இனிதே வாழலாம் என்பது உறுதி. | தொகுப்பு: வி.ராம்ஜி
 

Recently Added

More From This Category

x