குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 14 May 2024 14:43 pm
1 / 18
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசு திருவிழா இன்று (மே 14) கோலாகலமாக நடைபெற்றது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்
2 / 18
இந்தத் திருவிழாவில் பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு தலையில் சுமந்து ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
3 / 18
சிரசு திருவிழா விழாவுக்கு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.
4 / 18
வேலூர் மாவட்டம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான சிரசு திருவிழா இன்று (மே 14) நடைபெற்றது.
5 / 18
குடியாத்தம் நடுப்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இன்று காலை 9 மணிக்குள் கெங்கையம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது.
6 / 18
அதன் பிறகு கோயில் மண்டபத்தில் உள்ள சண்டளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு கண் திறக்கப்படும் நிகழ்வு நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்குப் பிறகு மாலையில் மீண்டும் அம்மன் சிரசு எடுக்கப்பட்டு மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
7 / 18
முன்னதாக, நடந்த கெங்கை யம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோயிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத் தொடர்ந்து கெங்கை யம்மன் உற்சவம் அலங்கரிக்கப்பட்டு தேரில் நிறுத்தப்பட்டது.
8 / 18
பின்னர், கெங்கையம்மன் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்ற தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு உள்ளிட்டவற்றை தேர் மீது துவி நேர்த்திகடன் செலுத்தினர். மேலும், ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18