Published on : 24 Feb 2024 20:04 pm

கும்பகோணம் மகாமக குளக்கரையில் புனித நீராடல் @ மாசி மக விழா | ஆல்பம் by ஆர்.வெங்கடேஷ்

Published on : 24 Feb 2024 20:04 pm

1 / 33
மாசி மகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம்.
2 / 33
நிகழாண்டு இவ்விழாவையொட்டி, கும்பகோணம் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் கடந்த பிப்.15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து காலை, மாலை சுவாமி வீதியுலா  நடைபெற்று வந்தன.
3 / 33
மேலும், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் மாசி மக விழா ஏக தின உற்சவமாக நடைபெற்றது.  மாசிமக தினத்தையொட்டி அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள், குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, குளத்தில் புனித நீராடினர்.
4 / 33
தொடர்ந்து, நான்கு கரைகளிலும் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 கோயில்களிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி  மற்றும் அம்பாள் எழுந்தருளினர்.
5 / 33
தொடர்ந்து அந்தந்த கோயில் அஸ்திரதேவருக்கு 21 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  12.30 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, நான்கு கரைகளிலும், குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
6 / 33
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்குக்கான பாலாலயமும், கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் கொடி மரம் திருப்பணிக்கான பாலாலயமும் செய்யப்பட்டுள்ளதால், இரு கோயில்களிலும் நிகழாண்டு மாசி மக விழா நடைபெறவில்லை.
7 / 33
8 / 33
9 / 33
10 / 33
11 / 33
12 / 33
13 / 33
14 / 33
15 / 33
16 / 33
17 / 33
18 / 33
19 / 33
20 / 33
21 / 33
22 / 33
23 / 33
24 / 33
25 / 33
26 / 33
27 / 33
28 / 33
29 / 33
30 / 33
31 / 33
32 / 33
33 / 33

Recently Added

More From This Category

x