Published on : 23 Nov 2023 21:21 pm

கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம் - போட்டோ ஸ்டோரி

Published on : 23 Nov 2023 21:21 pm

1 / 27
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) வியாழக்கிழமை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
2 / 27
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.
3 / 27
தென் திருப்பதி என அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ராஜகோபுரம் 120 அடி உயரம், 7 நிலைகளையுடையது. ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைப்பு பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பில் 13.3.2022-ல் பாலாலய பூஜையுடன் தொடங்கியது.
4 / 27
ராஜகோபுரத்திலுள்ள 628 சிற்பங்கள் பழமை மாறாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் மூலம் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டது. ராஜகோபுரத்தில் உள்ள ஆறேகால் அடி உயரமுள்ள 7 கும்பங்களுக்கு தங்க மூலாம் பூசப்பட்டது.
5 / 27
இப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிவடைந்தன. அதன் பின்னர் நவ.23-ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து நவ.21-ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.
6 / 27
இன்று காலையில் கள்ளழகர் கோயில் மூலவர் சன்னதியிலிருந்து பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் 160 கலசங்களை பட்டர்கள் யாக சாலையில வைத்து பூஜை செய்தனர். சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள் 8 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை செய்தனர்.
7 / 27
பின்னர் இன்று அங்கிருந்து காலையில் 9.15 மணியளவில் கடங்கள் ராஜகோபுரம் நோக்கி புறப்பாடானது. ராஜகோபுரத்திற்கு சுமார் 9.45 மணியளவில் 7 கும்பங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
8 / 27
பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்கினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 16 இடங்களில் சுழல்கருவிகள் வசதி செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தின் போது 3 கருடன் வானில் வட்டமிட்டது.
9 / 27
ஆன்மிக சொற்பாழிவாளர் மங்கையர்க்கரசி கோயிலின் சிறப்புகள் பற்றி வர்ணனை செய்தார்.
10 / 27
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்தனர்.
11 / 27
மதுரை மாவட்ட எஸ்பி எஸ். சிவ பிரசாத் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
12 / 27
தகவல்:சுப.ஜனநாயகசெல்வம்
 | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 27
14 / 27
15 / 27
16 / 27
17 / 27
18 / 27
19 / 27
20 / 27
21 / 27
22 / 27
23 / 27
24 / 27
25 / 27
26 / 27
27 / 27

Recently Added

More From This Category

x