மதுரை மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 03 May 2023 16:13 pm
1 / 22
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான புதன்கிழமை பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த மதுரை பிரியாவிடை சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருத்தேர் | படங்கள்: நா.தங்கரத்தினம்
2 / 22
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 3) வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர கோஷங்களை எழுப்பி 4 மாசி வீதிகளிலும் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
3 / 22
தேரோட்டத்தை ஒட்டி நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
4 / 22
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் ஏப்.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
5 / 22
தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம் நாள் திருவிழாவாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30ல் நடைபெற்றது. அடுத்த நாள் மே 1-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெற்றது.
6 / 22
சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று மே 2-ல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் திருமண வைபோகத்தின் போது தங்கள் திருமாங்கல்யத்தை புதுப்பித்து கட்டி கொண்டனர்.
7 / 22
அதனைத் தொடர்ந்து இன்று (மே 3) தேரோட்டம் நடைபெற்றது. பிரியாவிடை, சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் தனித்தனி தேரிலும் எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
8 / 22
நாளை மே 4-ம் தேதியுடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதற்கு அடுத்த நாள் மே 5-ல் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.
9 / 22
10 / 22
11 / 22
12 / 22
13 / 22
14 / 22
15 / 22
16 / 22
17 / 22
18 / 22
19 / 22
20 / 22
21 / 22
22 / 22