மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 24 Apr 2023 10:24 am
1 / 11
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். | படங்கள்: படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 11
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
3 / 11
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
4 / 11
காலை 10 மணியளவில் சுவாமி சந்நிதி கம்பத்தடி மண்டபம் முன்பு, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். காலை 10.35 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.
5 / 11
கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
6 / 11
நிகழ்ச்சியில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
7 / 11
அதன் பின்பு ஞாயிற்றுக்கிழமை மாலை கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிம்மவாகனத்தில் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்தனர்.
8 / 11
ஏப். 30-ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 2-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 3-ல் தேரோட்டம் நடைபெறும்.
9 / 11
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் ஆ.அருணாசலம் தலைமையில் கோயில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
10 / 11
11 / 11