உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: புகைப்படத் தொகுப்பு
Published on : 18 Apr 2023 18:35 pm
1 / 4
நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக உதகை மாரியம்மன் கோயில் விளங்குகிறது. நகரின் மையப் பகுதியிலுள்ள இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். | படங்கள்: எம். சத்யமூர்த்தி
2 / 4
ஆண்டுதோறும் உதகை மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ம் தேதி கலச பூஜை மற்றும் பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
3 / 4
இதையொட்டி, வரும் 21-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
4 / 4
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. சிறப்பு கனகாபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் நடைபெற்றது.