குளியல் தொட்டியில் பார்வதி யானை உற்சாகம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 17 Apr 2023 15:42 pm
1 / 9
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யானை புத்துணர்வு பெறும் வகையில், ரூ.23.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
2 / 9
மீனாட்சி அம்மன் கோயில் யானை `பார்வதி'க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அப்போது சிறந்த கால்நடை மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தாய்லாந்து நாட்டில் இருந்து யானைக்கான சிறப்பு மருத்துவக் குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர்.
3 / 9
அப்போது யானையின் மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்வுடன் இருக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
4 / 9
அதன்படி கோயில் வளாகத்தில் யானை நீந்தி குளிக்கும் வகையில் குளியல் தொட்டி கட்டுவதற்கு ரூ.23.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
5 / 9
அதன்படி கட்டி முடிக்கப்பட்ட குளியல் தொட்டியை நேற்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் யானை `பார்வதி'யை பாகன்கள் அழைத்து வந்தனர். தொட்டியில் தண்ணீரைக் கண்டதும் யானை துள்ளிக்குதித்து விளையாடியது.
6 / 9
பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருக்கும்போதே, பல முயற்சிகள் எடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன். தற்போது முதல்வர், துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது...
7 / 9
யானையின் கண்ணில் உள்ள விழித்திரையில் ஏற்பட்ட நோய்த் தொற்றை சரி செய்யும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. யானையின் மன அழுத்தத்தைப்போக்கவே குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதில் யானை விளையாடி குளிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
8 / 9
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, இந்துசமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.
9 / 9