பழநி தைப்பூசம் உற்சவ திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு
Published on : 04 Feb 2023 17:54 pm
1 / 26

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. | படங்கள்: நா.தங்கரத்தினம்
2 / 26

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 / 26

இதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பழநியில் குவிந்து வருவதால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
4 / 26

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
5 / 26

விழாவின் ஆறாம் நாளில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
6 / 26

தொடர்ந்து இரவு 9 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோயில் இணை ஆணையர் நடராஜன், அங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
7 / 26

தொடர்ந்து இன்று தைப்பூசத்தை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
8 / 26

தேரோட்டத்தை காண ஏராளமானோர் பழநிக்கு வந்த வண்ணம் இருந்ததால் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
9 / 26

10 / 26

11 / 26

12 / 26

13 / 26

14 / 26

15 / 26

16 / 26

17 / 26

18 / 26

19 / 26

20 / 26

21 / 26

22 / 26

23 / 26

24 / 26

25 / 26

26 / 26
