1 / 34
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இன்று (ஜன.27) காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது | படங்கள்: நா. தங்கரத்தினம்
2 / 34
16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பழநியில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
3 / 34
முருகப்பெருமானின் மூன்றாம்படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள மலைக்கோயிலில் முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருந்து மக்களுக்கு காட்சியளிக்கிறார்.
4 / 34
ஞானப்பழம் குறித்து எழுந்த சர்ச்சையில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு முருகக் கடவுள் வந்து குடியேறிய இடம் என சிறப்பு பெற்றது பழநி மலை.
5 / 34
பழநி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு (2006) கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும்
6 / 34
பல முறை கும்பாபிஷேகம் நடத்த முயற்சித்தும் 2018 ம் ஆண்டு நடைபெறவேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தநிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறத்துவங்கி கடந்தவாரம் முடிவுற்றது. இதையடுத்து இன்று(ஜன., 27) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 / 34
முன்னதாக யாகசாலை பூஜைகள், வேள்வி பூஜைகள் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து காலை 8.15 மணிமுதல் 9.15 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற்றது
8 / 34
பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ராஜகோபுரம், தங்ககோபுரம் மேல் உள்ள கலசங்களுக்கு மந்திரங்கள் முழுங்க புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.
9 / 34
அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.,இ.பெ.செந்தில்குமார், கோயில் இணைஆணையர் நடராஜன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக விழாவை அமைச்சர்கள், எம்எல்ஏ இணைந்து பச்சைக் கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தனர்.
10 / 34
கும்பாபிஷேகத்தை மலைக்கோயிலில் இருந்து 6000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கண்டு கோபுரதரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் மெகா ஸ்கிரீன்களிலும் ஒளிபரப்பப்பட்டது. நேரலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டனர்.
11 / 34
கும்பாபிஷேகத்தை காண மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட ஆறாயிரம் பக்தர்கள் மலையில் இருந்து இறங்கியபிறகு, வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
12 / 34
கும்பாபிஷேகத்தை காண அனுமதிச்சீட்டு கிடைக்காத பக்தர்கள் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிதரிசனம் செய்ய அதிக ஆர்வம் காட்டி மலைக்கோயிலுக்கு சென்றனர்.
13 / 34
கும்பாபிஷேக காட்சிகள் மலை அடிவாரம் பகுதியில் அகன்ற திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் மலைக்கோயில் மட்டுமின்றி மலையடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது
14 / 34
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
15 / 34
கண்காணிப்பு பணியில் டிரோன் கேமிராக்களும் ஈடுபடுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டிருந்த பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றதால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.
16 / 34
17 / 34
18 / 34
19 / 34
20 / 34
21 / 34
22 / 34
23 / 34
24 / 34
25 / 34
26 / 34
27 / 34
28 / 34
29 / 34
30 / 34
31 / 34
32 / 34
33 / 34
34 / 34