‘ப்ரீத்தி’யும் மோடியும்... அதிமுகவின் அடிமை சேவகம்... - ஸ்டாலின் 10 தெறிப்புகள் @ விருதுநகர்
Published on : 27 Mar 2024 21:38 pm
1 / 10
“பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு - சமூக நீதிக்கு மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பாஜக.”
2 / 10
“பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசு பணிகளில் மண்டல் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்குவது இல்லை.”
3 / 10
“பாஜக வரலாறு காணாத ஊழல்களைச் செய்துவிட்டு, அதை மூடி மறைக்க ED,IT,CBI போன்ற அமைப்புகளைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டார்கள்."
4 / 10
“சீனப் பட்டாசுகளை பா.ஜ.க. அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், சிவகாசியில் 1000 கோடி ரூபாய் அளவுக்குப் பட்டாசு தயாரிப்பு சரிவைச் சந்தித்தது."
5 / 10
“பட்டாசு தொழில் நலிவடைந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஆடம்பரப் பொருள்கள் பட்டியலில் பட்டாசையும் சேர்த்து 28 விழுக்காடு வரி போட்ட கட்சிதான் பாஜக".
6 / 10
“இண்டியா கூட்டணியை பார்த்து பயந்து, பிரதமர் மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்."
7 / 10
“410 ரூபாய் இருந்த சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் பாஜகவின் சாதனை."
8 / 10
“ப்ரீத்திக்கு நான் கேரன்டி” என்று ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரன்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார்."
9 / 10
“ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக 8 தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அக்கட்சி."
10 / 10
“அதிமுகவின் தோல்விகளுக்கு காரணம், பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்து, தமிழக உரிமைகளை மொத்தமாக தாரைவார்த்து துரோகம் செய்ததுதான்.”