திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’ - போட்டோ ஸ்டோரி
Published on : 15 Oct 2023 03:31 am
1 / 13
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது.
2 / 13
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் நடந்த இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
3 / 13
"2010ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தியின் வலியுறுத்தலின் பேரில் திமுக ஆதரவாடு மகளிர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவர எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால், மகளிர் மசோதாவை கொண்டு வந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக, 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வரமுடியாத மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். தேர்தலுக்காக பெண்களை ஏமாற்ற துடிக்கிறது பாஜக" என விழாவில் பேசிய கனிமொழி குற்றம் சுமத்தினார்
4 / 13
“பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
5 / 13
"கடந்த 70 ஆண்டுகளில் நாம் பெற்று தந்த உரிமைகள் மற்றும் நல்ல முயற்சிகளை சீரழிக்கின்ற வகையில் 9 ஆண்டுகால மோடி அரசின் நடவடிக்கைகள் இருப்பது மிகப்பெரிய துரதிஷ்டம்" என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
6 / 13
7 / 13
8 / 13
9 / 13
10 / 13
11 / 13
12 / 13
13 / 13