மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் தழுவிய மார்க்சிஸ்ட் போராட்டம் - போட்டோ ஸ்டோரி
Published on : 07 Sep 2023 17:25 pm
1 / 17
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
2 / 17
‘விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலை வாய்ப்பை உருவாக்கிட கோரியும், மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மாநிலம் முழுவதும் இன்று (செப்.7) மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் முன்பு மறியல் நடந்தது. இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். | இடம்: சேலம் | படங்கள்: எஸ்.குரு பிரசாத்.
3 / 17
தமிழகம் மாநிலம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 50,000-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் கணிசமான பெண்களும், இளைஞர்களும் பங்கேற்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4 / 17
இந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் தலைமை ஏற்றதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
5 / 17
“கொளுத்துகின்ற வெயிலில் ஆண்களும், பெண்களும் ஆயிரம் ஆயிரமாய் மோடி அரசுக்கு எதிராக உற்சாகமாக இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது மோடி அரசு மீது மக்களுக்கு உள்ள வெறுப்பை காட்டுகிறது. மேலும், இந்த மறியல் போராட்டம் என்பது ஒன்றிய மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.| இடம்: மதுரை| படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 17
7 / 17
இடம்: காட்பாடி| படங்கள்: வி.எம்.மணிநாதன்
8 / 17
9 / 17
10 / 17
இடம்: தஞ்சாவூர் | படங்கள்:ஆர்.வெங்கடேஷ்
11 / 17
12 / 17
13 / 17
இடம்: கிண்டி| படங்கள்: எஸ்.சத்தியசீலன்
14 / 17
15 / 17
16 / 17
இடம்: மதுரை | படங்கள்: மூர்த்தி
17 / 17