பிறந்தநாளில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் - போட்டோ ஸ்டோரி
Published on : 25 Aug 2023 15:18 pm
1 / 8
தனது 71-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். | புகைப்படங்கள்: பி.வேளாங்கண்ணி ராஜ்
2 / 8
உடல் நலக்குறைவு காரணமாக இருக்கையில் அமர்ந்தபடி, தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை விஜயகாந்த் வெளிப்படுத்தினார்.
3 / 8
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
4 / 8
தனது மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.
5 / 8
விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்ப்போது, "கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
6 / 8
மேலும், “தயவுசெய்து ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் தவறாக எழுதாதீர்கள். காரணம், கடைக்கோடியில் இருக்கும் தேமுதிக தொண்டர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்” என்றார் பிரேமலதா.
7 / 8
“கட்சித் தொண்டர்களே, அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள். விஜயகாந்த் நம்முடன் நூறாண்டு காலம் நிச்சயம் இருப்பார்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
8 / 8
விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.