1 / 51
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை அருகே வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.தங்கரத்தினம்
2 / 51
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மதுரையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு ‘அதிமுக வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிட்டு இருந்தனர்.
3 / 51
தமிழகம் முழுவதும் இருந்து இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதனால், மாநாடு நடந்த ‘ரிங்’ ரோடு மட்டுமில்லாது மதுரையே திருவிழா போல் காணப்பட்டது. வாகனங்களில் வந்த தொண்டர்களால் மதுரை புறநகர் பகுதியில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
4 / 51
இன்று காலை திட்டமிட்டப்படி மாநாட்டு நுழைவு வாயிலில் 51 அடி கொடி கம்பத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அதிமுக கொடியேற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கிய வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
5 / 51
தொடர்ந்து மாநாட்டு பந்தலை திறந்து வைத்து, அதிமுகவின் 51 ஆண்டு கால வரலாற்று புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சென்றார்.
6 / 51
அதன்பிறகு நிர்வாகிகள், தொண்டர்களை மகிழ்விக்க மாலை வரை மேடையில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வறு நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4.30 மணியளவில் மீண்டும் மேடைக்கு வந்த பழனிசாமி தலைமையில் மாநாடு தொடங்கியது.
7 / 51
மாநாட்டு பொறுப்பாளர்களும், முன்னாள் அமைச்சர்களான செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்று பேசினர்.
8 / 51
அவர்களை தொடர்ந்து தலைமை நிலையை செயலாளர் எஸ்பி.வேலுமணி, பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மூத்த தலைமை கழக நிர்வாகிகள் பேசினர். அவர்களை தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப்பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி ஆகியோர் பேசினர்.
9 / 51
அதன்பிறகு மாநாட்டில் சர்வ சமய பெரியவர்கள் சார்பில் ‘புரட்சி தமிழர்’ என்ற பட்டம் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
10 / 51
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், ‘‘இனி இந்த பட்டத்தில்தான் அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுச்செயலாளர் பழனிசாமியை அழைக்க வேண்டும், குறிப்பிட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
11 / 51
மாநாட்டில் நிறைவு உரையாக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “அதிமுகவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
12 / 51
13 / 51
14 / 51
15 / 51
16 / 51
17 / 51
18 / 51
19 / 51
20 / 51
21 / 51
22 / 51
23 / 51
24 / 51
25 / 51
26 / 51
27 / 51
28 / 51
29 / 51
30 / 51
31 / 51
32 / 51
33 / 51
34 / 51
35 / 51
36 / 51
37 / 51
38 / 51
39 / 51
40 / 51
41 / 51
42 / 51
43 / 51
44 / 51
45 / 51
46 / 51
47 / 51
48 / 51
49 / 51
50 / 51
51 / 51