இத்தாலியின் ரோம் மாநகரில் சென்னை மேயர் பிரியா - போட்டோ ஸ்டோரி
Published on : 20 Jun 2023 15:05 pm
1 / 10
சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களில் குப்பைகளைக் கையாளும் பணியை தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. மேலும், இரண்டு மண்டலங்களை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.
2 / 10
இதைத் தவிர, குப்பைக் கிடங்கு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில், பெருங்குடி குப்பை கிடங்கு ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கொடுங்கையூர் குப்பை கிடங்கும் அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
3 / 10
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குப்பைகளைக் கையாள பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் குறித்து அறிந்து கொள்ள நான்கு நாள் பயணமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் கமிஷனர் சங்கர் லால் குமவாத், தலைமை பொறியாளர் மகேசன், செயற் பொறியாளர் விஜய்அரவிந்த் ஆகியார் இத்தாலி சென்றுள்ளனர்.
4 / 10
இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்ட அவர்கள், திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.
5 / 10
மேலும், URBASER நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மேயர் பிரியா உள்ளிட்ட சென்னை மாநகராட்சி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
6 / 10
முன்னதாக, இது குறித்து மேயர் பிரியா கூறுகையில், “சென்னையில் குப்பைகளைக் கையாளும் பணியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, ஸ்பெயின் நாட்டில் குப்பைகளைக் கையாளும் பணிகள் குறித்த தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள செல்கிறோம்” என்றார்.
7 / 10
மேலும், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் அடிப்படையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தத் தொழில்நுட்பங்களை சென்னையில் அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.
8 / 10
இத்தாலி நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி குழுவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
9 / 10
10 / 10