செந்தில்பாலாஜி மருத்துவமனை அனுமதி முதல் முதல்வர் வருகை வரை: போட்டோ ஸ்டோரி
Published on : 14 Jun 2023 12:53 pm
1 / 11
கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2 / 11
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
3 / 11
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை
திமுக அமைச்சர்கள் சந்தித்தனர்.
4 / 11
"விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5 / 11
இதனைத் தொடர்ந்து காலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு முதல்வர் வருகை புரிந்தார்.
6 / 11
செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
7 / 11
அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
8 / 11
இதற்கிடஒயே கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகமாக பயன்படுத்திய கட்டிடத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைக்கப்பட்டுள்ளது.
9 / 11
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி முறையீடு செய்தார். மனுத்தாக்கல் நடைமுறைகள் நிறைவுற்றால் இன்று பிற்பகலிலேயே இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
10 / 11
அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நள்ளிரவில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அது கைது தானா? இல்லை தடுப்புக் காவலா? என்று எதையும் இதுவரை அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தாமல் இருக்கிறது. அதேபோல் தமிழக அரசுத் தரப்பிலும் இதுவரை அமைச்சர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தால் அவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் அமலாக்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால்தான் தெரியவரும்
11 / 11
ஒமந்தூரார் மருத்துவமனையில் காத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் பிற அமைச்சர்கள்