புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்வு - புகைப்படத் தொகுப்பு
Published on : 28 May 2023 12:03 pm
1 / 27
தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன், 5 ஸ்டார் அந்தஸ்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்
2 / 27
இந்த கட்டிடம் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களவையில் 888 உறுப்பினர்கள் சவுகரியமாக அமர முடியும், மாநிலங்களவையில் 300 பேர் அமர முடியும். கூட்டுக் கூட்டம் நடந்தால், மக்களவையில் 1,280 உறுப்பினர்கள் அமர முடியும்.
3 / 27
சுதந்திரத்தின் போது இந்தியர்களிடம் ஆட்சி மாறியதற்கு அடையாளமாக, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க செங்கோலை, நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவினார்.
4 / 27
செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்களும் தேவாரமும் ஓத செங்கோலுக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது
5 / 27
செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.
6 / 27
வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள்.
7 / 27
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.
8 / 27
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி
9 / 27
10 / 27
11 / 27
12 / 27
13 / 27
14 / 27
15 / 27
16 / 27
17 / 27
18 / 27
19 / 27
20 / 27
21 / 27
22 / 27
23 / 27
24 / 27
25 / 27
26 / 27
27 / 27