Published on : 01 Mar 2023 21:01 pm

முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் - புகைப்படத் தொகுப்பு

Published on : 01 Mar 2023 21:01 pm

1 / 21
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தாள்விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது.
2 / 21
இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
3 / 21
"பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களைப் புரிந்துகொண்டு கொள்கை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம். அந்தக் களத்திற்குப் போவதற்கு போர் வியூகங்களை வகுக்கக்கூடிய பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது எனக்க மகிழ்ச்சியளிக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4 / 21
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, "தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி, 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2006, 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளுக்கு வழிவகுத்தது. இந்தக் கூட்டணியை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரவும் வலுப்படுத்தவும் விரும்புகிறோம். இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்ற பெறும்" என்றார்.
5 / 21
இக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, "கரோனா காலக்கட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட சிறப்பான பணிகளாலும், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிற மக்களுக்கும் வழங்கப்பட்ட உதவிகளாலும் தமிழக மக்கள் கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டனர்" என்றார்.
6 / 21
இக்கூட்டத்தில் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா பேசும்போது, "இந்த மேடையில் இல்லாத தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது விழித்துக் கொள்ளுங்கள். அனைத்து மக்களும் மரியாதை, மாண்பு, அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.
7 / 21
8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x