1 / 27
ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
2 / 27
ஈரோடு சம்பத் நகரில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
3 / 27
சம்பத் நகர் பிரதான சாலையில் சாலையோரம் வரவேற்பு அளித்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
4 / 27
இந்தப் பிரச்சாரத்தின்போது, குழந்தைகளிடம் கைகுலுக்கி, பெண்களுடன் செல்வி எடுத்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
5 / 27
தொடர்ந்து பெரிய வலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜித் வீதிகளில் வாகனத்தில் சென்றுகொண்டே வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
6 / 27
கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பேசும்போது "மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில், பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ 1000 எப்போது வழங்கப்படும் என அறிவிக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
7 / 27
கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக பிராமண பெரிய அக்ரஹாரம் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டே வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
8 / 27
அக்ரஹாரம் பகுதியில் பேசும்போது, “உங்கள் முகத்தில் தோன்றக்கூடிய எழுச்சி, உணர்ச்சி, ஆர்வம், ஆரவாரம் எல்லாம் பார்க்கும்போது, நம்முடைய வேட்பாளர் இளங்கோவன் வெற்றி, சாதாரண வெற்றி அல்ல, ஒரு மகத்தான வெற்றி என்பதை காட்டுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
9 / 27
மாலையில் பிரச்சாரத்தை தொடங்கி முனிசிபல் காலனியில் வாகனத்தில் சென்று கொண்டே வாக்கு சேகரித்தார்.
10 / 27
முனிசிபல் காலனியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "அதிமுக வேட்பாளர் முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. எனவே, அவர் டெபாசிட் இழக்கும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.
11 / 27
தொடர்ந்து பன்னீர்செல்வம் பூங்கா வழியாக பெரியார் நகர் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
12 / 27
13 / 27
14 / 27
15 / 27
16 / 27
17 / 27
18 / 27
19 / 27
20 / 27
21 / 27
22 / 27
23 / 27
24 / 27
25 / 27
26 / 27
27 / 27