1 / 18
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து இபிஎஸ் அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். | படங்கள்: என். ராஜேஷ், ஜி. மூர்த்தி, எம்.கோவர்த்தன், எஸ்.ஆர். ரகுநாதன்
2 / 18
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் அதிமுகவினர் ஓபிஎஸ், பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. அதில் பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
3 / 18
அந்தப் பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
4 / 18
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
5 / 18
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 / 18
இபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்று சிறப்பு மிக்க உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் நல்லாசியுடனும், ஒன்றரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும், கட்சியை வழிநடத்தவும், ஜெயலலிதா கண்ட நூறாண்டு சரித்திரக் கனவை நனவாக்கவும் உயிர் மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
7 / 18
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உருவப் படத்திற்கு அதிமுக தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 / 18
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந் தொண்டர்கள் காலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில், இபிஎஸ் உருவப் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18