Published on : 26 Jan 2023 19:03 pm

ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் - போட்டோ ஸ்டோரி

Published on : 26 Jan 2023 19:03 pm

1 / 10
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
2 / 10
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.
3 / 10
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், இந்தாண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
4 / 10
குடியரசு தின விழாவையொட்டிய ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
5 / 10
முன்னதாக, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. அதன்படி, அக்கட்சியினர் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
6 / 10
குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி ஆளுநர் மாளிகையில் அளித்த தேநீர் விருந்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் கலந்துகொண்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.
7 / 10
8 / 10
9 / 10
10 / 10

Recently Added

More From This Category

x